Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கான முழுச் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய அணியின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான, டெஸ்ட் போட்டிகளுக்கான குழாம்கள் நேற்று (21) அறிவிக்கப்பட்டன.
அறிவிக்கப்பட்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான குழாம்களில், இந்தியாவுக்காக இதுவரை அறிமுகத்தை மேற்கொள்ளாத வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி மற்றும் துடுப்பாட்டவீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹமட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமில், இந்தியாவுக்காக இதுவரையில் விளையாடாத சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர், சுழற்பந்துவீச்சாளர் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், காயத்திலிருந்து குணமடைந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஷீகர் தவான், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான குழாம்களுக்கு திரும்பியுள்ளார்.
இதேவேளை, இந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரில் பங்கேற்க முடியாதென இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோணி அறிவித்திருந்த நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான குழாம்களிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதுடன், இச்சுற்றுப்பயணம் முழுவதும் காயமடைந்த ஹர்டிக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டோணிக்கு அடுத்த விக்கெட் காப்பாளராகவிருந்த தினேஷ் கார்த்திக் எந்தவொரு குழாமிலும் இடம்பெறாத நிலையில், உலகக் கிண்ண இறுதிக் கட்டப் போட்டிகளில் அவர் பிரதியீடு செய்திருந்த கேதார் யாதவ் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான குழாம்களில் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை, உபாதையிலிருந்து குணமடைந்த விக்கெட் காப்பாளர் ரித்திமான் சஹால் டெஸ்ட் குழாமுக்குத் திரும்பியுள்ளார்.
இ-20 குழாம்: விராத் கோலி (அணித்தலைவர்), ரோஹித் ஷர்மா (உப அணித்தலைவர்), ஷீகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, றிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), குருனால் பாண்டியா, இரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், ராகுல் சஹர், புவ்னேஷ்வர் குமார், கலீல் அஹமட், தீபக் சஹர், நவ்தீப் சைனி.
ஒ.நா.ச.போ குழாம்: விராத் கோலி (அணித்தலைவர்), ரோஹித் ஷர்மா (உப அணித்தலைவர்), ஷீகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, றிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), இரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், கேதார் யாதவ், மொஹமட் ஷமி, புவ்னேஷ்வர் குமார், கலீல் அஹமட், நவ்தீப் சைனி.
டெஸ்ட் குழாம்: விராத் கோலி (அணித்தலைவர்), அஜின்கியா ரஹானே (உப அணித்தலைவர்), மாயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், செட்டேஸ்வர் புஜாரா, ஹனும விஹாரி, ரோஹித் ஷர்மா, றிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), ரித்திமான் சஹா (விக்கெட் காப்பாளர்), இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago