Shanmugan Murugavel / 2016 நவம்பர் 27 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூப்பந்தாட்டப் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திரமாக உருவாகியுள்ள பி.வி.சிந்து , சில நாட்கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது பட்டத்தைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்தார்.
ஹொங் கொங் பகிரங்க பூப்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டி, இன்று இடம்பெற்றது. இதில் உலகின் 3ஆம் நிலை வீராங்கனையான தாய்வானின் தாய் ஸு-யிங்கை, பி.வி.சிந்து எதிர்கொண்டார். இதில் 21-15, 21-17 என்ற செட் கணக்கில், தாய் ஸு-யிங் வெற்றிபெற்றார்.
சீன பகிரங்க பூப்பந்தாட்டப் போட்டிகளில், கடந்த வாரமே சம்பியன் பட்டத்தை வென்றிருந்த சிந்து, இப்போட்டியிலும் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே தோல்வியடைந்துள்ளார். ஆண்களுக்கான இறுதிப் போட்டியிலும், இந்தியாவைச் சேர்ந்த சமீர் வேர்மா மோதியிருந்தார். அவர் கா லோங் அங்குஸிட் தோல்வியடைந்திருந்தார்.
9 minute ago
19 minute ago
22 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
22 minute ago
30 minute ago