Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 10 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ஏ.சி மிலனுக்குமிடையிலான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றது.
ஏ.சி மிலன் சார்பாக, பிரஹிம் டயஸ், அன்டே றெபிச், பிகாயோ டொமோரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 85 புள்ளிகளுடன் சம்பியனான இன்டர் மிலன் முதலாமிடத்தில் காணப்படுகின்றது. அத்லாண்டாவும், ஏ.சி மிலனும் தலா 72 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் அத்லாண்டா இரண்டாமிடத்திலும், ஏ.சி மிலன் மூன்றாமிடத்திலுமுள்ளன. 70 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நாப்போலி காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
3 hours ago