2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல்: சண்றைசர்ஸை வென்ற நைட் றைடர்ஸ்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 12 , மு.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்று நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சண்றைசர்ஸின் அணித்தலைவர் டேவிட் வோணர், நைட் றைடர்ஸை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

அந்தவகையில், வேகமாக ஆரம்பித்த நைட் றைடர்ஸ், ரஷீட் கானிடம் ஷுப்மன் கில்லை பறிகொடுத்தது. பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ் ரானாவின் 80 (56), ராகுல் ட்ரிபாதியின் 53 (29) ஓட்டங்கள் மூலம் இனிங்ஸை வேகமாக நகர்த்திய நைட் றைடர்ஸ், பிற்பகுதியில் தங்கராசு நடராஜன், ரஷீட் கான், மொஹமட் நபி, புவ்னேஷ்வர் குமாரிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்தபோது, தினேஷ் கார்த்திக்கின் ஆட்டமிழக்காத 22 (09) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை நைட் றைடர்ஸ் பெற்றது.

பந்துவீச்சில், ரஷீட் கான் நான்கு ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2, மொஹமட் நபி நான்கு ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு, 188 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சண்றைசர்ஸ், ஆரம்பத்திலேயே வோர்னரையும், ரித்திமான் சஹாவையும் பிரசீத் கிருஷ்ணா, ஷகிப் அல் ஹஸனிடம் பறிகொடுத்தது. எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டேயின் ஆட்டமிழக்காத 61 (44), ஜொனி பெயார்ஸ்டோவின் 55 (40) ஓட்டங்கள் மூலம் இனிங்ஸ் நகர்ந்தது.

இந்நிலையில், பெயார்ஸ்டோ பற் கமின்ஸிடம் வீழ்ந்ததோடு, பின்னர் வந்த மொஹமட் நபி 14 (11), விஜய் ஷங்கர் 11 (07) ஓட்டங்களுடன் பிரசீத் கிருஷ்ணா, அன்ட்ரே ரஸலுடன் வீழ்ந்ததோடு,  அப்துல் சமட் ஆட்டமிழக்காமல் 19 (08) ஓட்டங்களைப் பெற்ற நிலையில், 20 ஓவர்களில்  விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்ற சண்றைசர்ஸ் 10 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக நிதிஷ் ரானா தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .