Shanmugan Murugavel / 2021 ஜூலை 04 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோப்பா அமெரிக்கா தொடரில், உருகுவேயை கொலம்பியா வெளியேற்றியுள்ளது.
பிரேசிலில் நடைபெற்று வரும் இத்தொடரில், இன்று அதிகாலை நடைபெற்ற தமது காலிறுதிப் போட்டியில் பெனால்டியில் 4-2 என்ற ரீதியில் உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு கொலம்பியா தகுதி பெற்றுள்ள நிலையில், உருகுவே தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
பெனால்டியில் கொலம்பியாவின் கோல் காப்பாளர் டேவிட் ஒஸ்பினா இரண்டு பெனால்டிகளைத் தடுத்திருந்தார்.
இந்நிலையில், மற்றைய காலிறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஈக்குவடோரை வென்று அரையிறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றிருந்தது. ஆர்ஜென்டீனா சார்பாக, றொட்றிகோ டீ போல், லொட்டரோ மார்ட்டின்ஸ், லியனல் மெஸ்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago