2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கால்பந்தாட்டத்தில் பாலியல் குற்றங்கள்: வைத்தியசாலையில் பயிற்றுநர்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 29 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் கால்பந்தாட்ட வட்டாரங்களில், இளைஞர் கால்பந்தாட்ட அணிகளில் இடம்பெற்றதாக எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகளில் பிரதானமாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாப் பயிற்றுநரான பரி பெனெல், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹேர்ட்ஃபோர்ட்ஷையர் பகுதியிலுள்ள நெப்வேர்த் பார்க் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, அவர் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.

மன்செஸ்டர் சிற்றி, ஸ்டோக்ஸ் சிற்றி உள்ளிட்ட அணிகளின் கனிஷ்ட அணிகளுக்குப் பயிற்றுநராகக் கடமையாற்றிய இவர், அப்போது சிறுவர்களாக இருந்த பலரை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. முன்னாள் வீரர்கள் பலர், தற்போது இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதனால், இங்கிலாந்தில் இது, மாபெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்நிலையிலேயே, சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமைக்காக ஏற்கெனவே மூன்று தடவைகள் சிறையில் அடைக்கப்பட்ட பெனெல், தனது வழக்கமான வீட்டிலிருந்து வெளியேறி, நெப்வேர்த் பார்க் பகுதியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் இவ்வாறு நினைவற்றுக் காணப்பட்டமைக்குரிய காரணம், இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்பதோடு, அவர் இன்னமும் வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .