Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 12 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், றியல் பெட்டிஸின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், அத்லெட்டிகோ மட்ரிட்டுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட கோலை யனிக் கராஸ்கோ பெற்றதுடன், பெட்டிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டியன் டெலோ பெற்றிருந்தார்.
இதேவேளை, வலென்சியாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், றியல் சொஸைடட்டுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது. வலென்சியா சார்பாக, டானியல் வஸ், கப்ரியல் பெளலிஸ்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சொஸைடட் சார்ப்பாக, அன்டர் குவெரா, அலெக்ஸான்டர் இஸாக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், லா லிகா புள்ளிகள் பட்டியலில் 67 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ காணப்படுகின்றது. 66 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் றியல் மட்ரிட்டும், 65 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பார்சிலோனாவும், நான்காமிடத்தில் 58 புள்ளிகளுடன் செவில்லாவும் காணப்படுகின்றன. இதில், மற்றைய அணிகளை விட செவில்லா ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
17 minute ago
38 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
38 minute ago
1 hours ago
7 hours ago