Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஜெனோவாவின் மைதானத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் சமப்படுத்தியது.
இன்டர் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மார்க்கஸ் துராம் பெற்றதோடு, ஜெனோவா சார்பாக அலெஸான்ட்ரோ வொக்லியாக்கோ, ஜூனியர் மெஸியாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, ஏ.சி மிலனின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் டொரினோ சமப்படுத்தியது. மிலன் சார்பாக அல்வரோ மொராட்டா, நொவா ஒகஃபோர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொரினோ சார்பாகப் பெறப்பட்ட கோலை டுவான் ஸப்பட்டா பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
11 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
54 minute ago
1 hours ago