Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் இரண்டாம் நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸ் சம்பியனானார்.
செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற நடப்புச் சம்பியனான ஜனிக் சின்னருனான இறுதிப் போட்டியின் முதலாவது செட்டில் ஸ்பெய்னின் அல்கரஸ் 5-0 என முன்னிலையில் இருந்த நிலையில் உபாதை காரணமாக போட்டியிலிருந்து முதல்நிலை வீரரான சின்னர் விலகிய நிலையிலேயே அல்கரஸ் சம்பியனானார்.
தனது அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை 6-4, 6-3 என்ற ரீதியில் நேர் செட்களில் வென்று அல்கரஸும், மற்றைய அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸின் டெரென்ஸ் அட்மனேயை 7-6 (7-4), 6-2 என்ற நேர் செட்களில் வென்று இத்தாலியின் சின்னரும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.
இதேவேளை எட்டாம் நிலை வீராங்கனையான ஜஸ்மின் பலோனியை 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சம்பியனாகியிருந்தார்.
தனது அரையிறுதிப் போட்டியில் கஸக்ஸ்தானின் எலெனா றைபகினாவை 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று போலந்தின் ஸ்வியாடெக்கும், மற்றைய அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் வெரோனிக்கா குடெர்மெட்டோவாவை 6-3, 6-7 (2-7), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இத்தாலியின் பலோனியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.
9 minute ago
14 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
46 minute ago