Shanmugan Murugavel / 2017 ஜனவரி 04 , மு.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டியொன்றுக்கு முன்பாக இடம்பெற்ற இனத்துவேஷ சம்பவமொன்று தொடரில், இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் இரசிகர்கள் நால்வருக்கு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை நேற்று (03) வழங்கிய பிரான்ஸ் நீதிமன்றமொன்று, பாதிக்கப்பட்டவருக்கு 10,000 யூரோ அபராதத்தை நட்டஈடாக செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
பரிஸா ஜேர்மா அணிக்கெதிரான போட்டியொன்றுக்காக, கடந்தாண்டு பெப்ரவரி மாதம் பயணமான செல்சி ரசிகர்களால் நிறைந்திருந்த நிலத்தடி ரயிலொன்றில் ஏற முயன்ற கறுப்பினத்தொருவரை இரண்டு முறை தள்ளிய காணொளி ஒன்றினாலேயே மேற்கூறப்பட்ட தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த காணொளியின் பின்னணியில்,”நாங்கள் இனத்துவேஷமிக்கவர்கள், நாங்கள் இனத்துவேஷமிக்கவர்கள் மற்றும் இந்த வழியையே நாங்கள் விரும்புகின்றோம்” என செல்சி ரசிகர்கள் கோஷமிடுவதும் பதிவாகியிருந்தது.
இந்நிலையிலேயே, ஒரு நாள் விசாரணையைத் தொடர்ந்து, வட அயர்லாந்தின் முன்னாள் பொலிஸ் அதிகாரியான, 52 வயதான றிச்சர்ட் பார்க்லி, 27 வயதான வில்லியம் சிம்ப்ஸன் ஆகியோருக்கு, ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. இவர்கள் இருவரும் பரிஸில் இடம்பெற்ற விசாரணைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
இதேவேளை, இங்கிலாந்திலுள்ள சிறப்பு மில்பீல்டின் பழைய மாணவனான, 22 வயதான ஜொஷூவா பார்சன்ஸுக்க, எட்டு மாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், சிவில் பொறியியலாளரான ஜேம்ஸ் பெயார்பயார்னுக்கு ஆறு மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago