Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 09 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவந்த ஜப்பான் பகிரங்க டென்னிஸ் தொடரின் சம்பியனாக, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் கிர்ஜியோஸ் தெரிவாகியுள்ளார். பெல்ஜியத்தின் டேவிட் கொபினைத் தோற்கடித்தே, இந்தச் சம்பியன் பட்டத்தை அவர் இன்று வென்றார்.
உலகின் 15ஆம் நிலை வீரரும் அவுஸ்திரேலியாவின் முதல்நிலை வீரருமான நிக் கிர்ஜியோஸ், சர்ச்சைகளுக்குப் பெயர் போனவராவார். சர்ச்சைகள் காரணமாக அண்மைக்காலத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவர், அவற்றைத் தாண்டி, இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
21 வயதான கிர்ஜியோஸ், 25 வயதானவரும் அண்மைக்காலத்தில் அதீத வளர்ச்சியை வெளிப்படுத்தி வருபவருமான டேவிட் கொபினை எதிர்கொண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய போது, முதலாவது செட்டை 4-6 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தார். ஆனால், அடுத்த செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய அவர், மூன்றாவதும் இறுதியுமான செட்டில், கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில், இருவருமே 5-5 என்ற புள்ளிகள் என்ற நிலையில் காணப்பட்ட போது, அமைதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 7-5 என அந்த செட்டைக் கைப்பற்றினார். இதன்படி, 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அவர் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இந்தப் பட்டம், அவரது வாழ்நாளில் அவர் கைப்பற்றிய 3ஆவது பட்டமென்பதோடு, மிகவும் உயர்நிலைப் பட்டமுமாகும்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago