2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷுக்கெதிரான இங்கிலாந்துக் குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியின் டெஸ்ட் குழாமும் ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர் கொண்டதாக டெஸ்ட் குழாமும் 15 பேர் கொண்டதாக ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெஸ்ட் குழாமில், அடுத்த மாதம் 20ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கையில், 39 வயதாகவிருக்கும் சுழற்பந்துவீச்சாளரான கரித் பற்றி, 11 வருடங்களுக்குப் பின்னர் அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் தவிர, இங்கிலாந்துக் குழாமில் கடந்த வருடம் இடம்பெற்ற அன்று பெருவிரலை முறித்துக் கொண்ட ஸபார் அன்ஸாரியும் குழாமில் இடம்பெற்றுள்ளார். இவர்கள் தவிர, ஹஸீப் ஹமீட்டும் குழாமில் இடம்பெற்றுள்ளார். எவ்வாறெனினும் ஹமீட், ஆரம்பத் துடுப்பாட்ட இடத்துக்கு, குழாமில் இடம்பிடித்துள்ள பென் டக்கெட்டுடன் போட்டியிடவுள்ளார். மேலதிக விக்கெட்காப்பாளராக ஜொஸ் பட்லர் குழாமில் இடம்பிடித்துள்ளார். இவர்கள் தவிர, வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட்டும் குழாமுக்குத் திரும்பியுள்ளார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான குழாமிலும் பென் டக்கெட் இடம்பிடித்துள்ளதோடு, ஜோ ரூட்டுக்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் குழாம்: அலிஸ்டியர் குக் (தலைவர்), மொயின் அலி, ஜேம்ஸ் அன்டர்சன், ஸபார் அன்சாரி, ஜொனி பெயார்ஸ்டோ, கரி பலன்ஸ், கரித் பற்றி, ஸ்டூவர்ட் புரோட், ஜொஸ் பட்லர், பென் டக்கெட், ஸ்டீவன் பின், ஹஸீப் ஹமீட், அடில் ரஷீட், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்

ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான குழாம்: ஜொஸ் பட்லர் (தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயார்ஸ்டோ, ஜேக் போல், சாம் பில்லிங்ஸ், லியாம் டோஸன், பென் டக்கெட், லியாம் பிளங்கெட், அடில் ரஷீட், ஜேஸன் றோய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .