Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் கால்பந்தாட்டக் கழகமான பரிஸா ஜெர்மைன் அணிக்கு, ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகான வி.எஃப்.எக்ஸ் வொல்ஸ்பேர்க் அணியின் முன்கள வீரரான ஜூலியன் ட்றெக்ஸ்லர் செல்கிறார்.
உலகக் கிண்ணம் வென்ற ஜேர்மனி தேசிய கால்பந்தாட்ட அணியின் வீரரான ட்றெக்ஸ்லர், 42 மில்லியன் யூரோக்களுக்கு, பரிஸா ஜெர்மைன் அணிக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.
23 வயதான ட்றெக்ஸ்லரை, இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகமான ஆர்சனல் ஒப்பந்தம் செய்ய எதிர்பார்த்திருந்தபோதும், தற்போது நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்துக்கு, பரிஸா ஜெர்மைன் அணியிடம் இணங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
பரிஸா ஜெர்மைன் கழகமும், வி.எஃப்.எல் வொல்ஃப்ஸ்பேர்க் கழகமும், நிதியியல் தொடர்பான விடயங்களில் இரகசியம் காக்க எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago