Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க கொமியுனிட்டி ஷீல்ட் போட்டியில், நடப்பு எஃப்.ஏ கிண்ண சம்பியன்களான கிறிஸ்டல் பலஸுடனான போட்டியில் நடப்பு பிறீமியர் லீக் சம்பியன்களான லிவர்பூல் தோற்றது.
வெம்ப்ளியில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற இப்போட்டியானது வழமையான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையில், பெனால்டியிலேயே 3-2 என்ற ரீதியில் பலஸ் வென்றது.
லிவர்பூல் சார்பாக ஹுகோ எகிடிகே, ஜெரெமி பிறிம்பொங்க் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பலஸ் சார்பாக ஜீன்-பிலிப்பே மடெடா, இஸ்மைலா சார் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
பெனால்டியில் லிவர்பூலின் மொஹமட் சாலா, தனதுதையை கோல் கம்பத்துக்கு மேலால் செலுத்தியதுடன், அலெக்ஸிஸ் மக் அலிஸ்டர், ஹார்வி எலியொட்டின் உதைகளை பலஸின் கோல் காப்பாளர் டீன் ஹென்டர்சன் தடுத்திருந்தார்.
11 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
54 minute ago
1 hours ago