Shanmugan Murugavel / 2016 நவம்பர் 09 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில் பங்குபற்றுவதற்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் கெரான் பொலார்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அனுமதி வழங்குவதில், ஆரம்பத்தில் நிலவிய இழுபறிக்குப் பின்னரே, தற்போது இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு இருபதுக்கு-20 தொடர்களில் பங்குபற்றும் வீரர்களின் ஒப்பந்தத் தொகையில் 20 சதவீதம், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இத்தொடரில் விளையாடுவதற்கு, பொலார்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், பங்குபற்றுவதற்கான அனுமதியை மறுப்பதற்கு, சபை தீர்மானித்திருக்கவில்லையெனவும் தாமதத்துக்கு வருந்துவதாகவும் தெரிவித்த சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி மைக்கல் முய்ர்ஹெட், 20 சதவீத தீர்வை குறித்து, பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
13 minute ago
30 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
34 minute ago