Shanmugan Murugavel / 2021 மே 19 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான குழாமில், ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரர் தோமஸ் மல்லர், பொரூசியா டொட்டமுண்டின் பின்களவீரர் மற்ஸ் ஹம்மெல்ஸை ஜேர்மனியின் பயிற்சியாளர் ஜோச்சிம் லோ மீள அழைத்துள்ளார்.
31 வயதான மல்லர், 32 வயதான ஹம்மெல்ஸின் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் காலம் முடிவடைந்து விட்டதாக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் லோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த சந்ததியை முன்னுரிமைப்படுத்தி இவர்கள், மியூனிச்சின் பின்களவீரர் ஜெரோம் பூட்டாங்கிடமிருந்து லோ நகர்ந்திருந்தார்.
இந்நிலையில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மத்தியகளவீரர் ஜூலியன் ட்ரெக்ஸ்லர், பூட்டாங்க், டொட்டமுண்டின் மத்தியகளவீரர் ஜூலியன் பிரான்ட் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை. தவிர, ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன் காயம் காரணமாக இடம்பெறவில்லை என்பதோடு, தன்னைத் தெரிவு செய்ய வேண்டாமென டொட்டமுண்டின் முன்களவீரர் மார்கோ றொய்ஸ் கோரியிருந்தார்.
குழாம்: பெர்ன்ட் லெனோ, மனுவல் நோயர், கெவின் ட்ரப், மத்தியாஸ் ஜின்டர், றொபின் கொஸென்ஸ், கிறிஸ்டியன் குன்டர், மார்சல் ஹல்ஸ்டென்பேர்க், மற்ஸ் ஹம்மெல்ஸ், லூகாஸ் குளோஸ்டர்மன், றொபின் கொச், அந்தோனியோ ருடிகர், நிக்கலஸ் சுலே, எம்ரே கான், சேர்ஜி நர்பி, லியோன் கொரெட்ஸ்கா, இல்கி குன்டோகன், கை ஹவேர்ட்ஸ், ஜொனஸ் ஹொஃப்மன், ஜோஷுவா கிம்மிச், டொனி க்றூஸ், தோமஸ் மல்லர், ஜமால் முசியாலா, புளோரியன் நெயுஹோஸ், லெரோய் சனே, கெவின் வொலான்ட், திமோ வேர்னர்.
35 minute ago
7 hours ago
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
7 hours ago
16 Apr 2026
16 Apr 2026