Shanmugan Murugavel / 2025 ஜனவரி 13 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க சவால் கிண்ணத் தொடரிலிருந்து ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.
தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியில் பெனால்டியில் தோற்றே ஆர்சனல் வெளியேறியிருந்தது.
போட்டியின் வழமையான நேரத்திலும், மேலதிக நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று சமநிலையில் காணப்பட்ட நிலையில் பெனால்டியில் 5-3 என்ற ரீதியில் யுனைட்டெட் வென்றது.
ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை கப்ரியல் பெற்றதோடு, யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ப்ரூனோ பெர்ணாண்டஸ் பெற்றிருந்தார்.
பெனால்டியில் யுனைட்டெட்டின் பெர்ணாண்டஸ், அமட் டியல்லோ, லெனி யொரோ, லிஸான்ட்ரோ மார்டினெஸ், ஜொஷுவா ஸிர்க்ஸீ ஆகியோர் தமதுதைகளை கோல் கம்பத்துக்குள் செலுத்தியிருந்தனர். ஆர்சனலின் மார்டின் ஒடெகார்ட், டெக்லன் றைஸ், தோமஸ் பார்ட்டி ஆகியோர் தமதுதைகளை உட்செலுத்திய நிலையில் கை ஹவேர்ட்ஸின் உதையை யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் அல்டே பயின்டிர் தடுத்திருந்தார்.
2 minute ago
12 minute ago
35 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
35 minute ago
39 minute ago