Shanmugan Murugavel / 2021 ஜூன் 28 , மு.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான போர்த்துக்கல் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஸ்பெய்னில் இன்று நடைபெற்ற பெல்ஜியத்துடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே தொடரிலிருந்து போர்த்துக்கல் வெளியேறியுள்ளது.
பெல்ஜியம் சார்பாகப் பெறப்பட்ட கோலை தொர்கன் ஹஸார்ட் பெற்றிருந்தார்.
இந்நிலையில், காலிறுதிப் போட்டிக்கு பெல்ஜியம் முன்னேறியுள்ளது.
இதேவேளை, ஹங்கேரியில் நேற்றிரவு நடைபெற்ற நெதர்லாந்துடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் வென்ற செக் குடியரசு காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
செக் குடியரசு சார்பாக, தோமஸ் ஹொலெஸ், பற்றிக் ஸிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், நெதர்லாந்தும் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago