Shanmugan Murugavel / 2016 நவம்பர் 27 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரில், நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றுள்ளது.
றியல் மட்ரிட், 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் ஜிகோன் அணியைத் தோற்கடித்தது. போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே, றியல் மட்ரிட் அணியின் லூகாஸ் வஸ்கூஸ் பெனால்டி பகுதிக்குள் வீழ்த்தப்பட்ட, றியல் மட்ரிட்டுக்கு பெனால்டி வழங்கப்பட்டது. அப்பெனால்டியை கோலாக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது அணிக்கு 1-0 என்ற முன்னிலையை வழங்கினார்.
பின்னர் போட்டியின் 18ஆவது நிமிடத்தில், நாச்சோவிடமிருந்து பந்தை, பாய்ந்து தலையால் முட்டிக் கோலாக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2-0 என்ற முன்னிலையை வழங்கினார். அதன்பின்னர் போட்டியின் 35ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற ஸ்போர்ட்டிங் அணி, இரண்டாவது பாதியின்போது அவ்வணியின் வீரரொருவர் பெனால்டி பகுதிக்குள் வைத்து வீழ்த்தப்பட வழங்கப்பட்ட பெனால்டியை, கோல் கம்பத்துக்கு மேலால் அடித்த நிலையில், கோல் எண்ணிக்கையை சமப்படுத்துவதற்கான வாய்ப்பைத் தவறவிட, 2-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் றியல் மட்ரிட் வெற்றிபெற்றது.
சனிக்கிழமை இடம்பெற்ற பிறிதொரு போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் வலென்சியாவை செவில்லா தோற்கடித்தது. இவ்வெற்றியுடன் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 27 புள்ளிகளைப் பெற்றுள்ள செவில்லா, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு உயர்ந்தது. செவில்லாவை விட ஆறு புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ள றியல் மட்ரிட், முதலிடத்தில் இருக்கிறது.
9 minute ago
19 minute ago
22 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
22 minute ago
30 minute ago