Shanmugan Murugavel / 2016 நவம்பர் 09 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹராரேயில் இடம்பெற்றுவரும் இரண்டாவது போட்டியில் வெற்றியின் விளிம்பில் இலங்கையணி உள்ளது.
491 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் சிம்பாப்வே அணி, இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவின்போது ஏழு விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. கிரேய்க் எர்வின் 65 ஓட்டங்களுடனும் டொனால்ட் ட்ரிபானோ ஓட்டமெதுவும் பெறாமலும் தற்போது களத்தில் உள்ளனர். முன்னதாக, 45 ஓட்டங்களுடன் ஷோன் வில்லியம்ஸ் ஆட்டமிழந்திருந்தார்.
பந்துவீச்சில், இலங்கையணி சார்பாக, ரங்கன ஹேரத் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி, டெஸ்ட் போட்டிகளில் தனது ஏழாவது 10 விக்கெட் பெறுதியைப் பதிவு செய்து கொண்டார். ஹேரத் தவிர, தனஞ்சய டி சில்வா, லகிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
முன்னதாக, ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸை இலங்கை இடைநிறுத்தியிருந்தது. துடுப்பாட்டத்தில், திமுத் கருணாரட்ன 88, குஷால் பெரேரா 62 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கிறேமி கிறீமர் நான்கு விக்கெட்டுகளையும் கார்ல் மும்பா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
சிம்பாப்வே அணி தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 272 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன், இலங்கையணி, தமது முதலாவது இனிங்ஸில் 504 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago