Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 28 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
48 அணிகளைக் கொண்ட உலகக் கிண்ணத் திட்டத்துக்கு, பூகோள கால்பந்தாட்ட சம்மேளனங்கள் முழுமையாக ஆதரவளிப்பதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.
ஒரு குழுவில் மூன்று அணிகளாக, 16 குழுக்கள் கொண்ட தொடராக உலகக் கிண்ணத்தை மாற்றுவதற்கான தனது நோக்கத்தை, இம்மாத ஆரம்பத்தில் இன்பான்டினோ வெளிப்படுத்தியிருந்தார். இன்பான்டினோவின் நோக்கத்தின்படி, ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், விலகல் முறையிலான சுற்றுகளுக்கு தகுதிபெறும்.
உலகக் கிண்ணத்தை, 48 அணிகள் கொண்ட தொடராக மாற்றுவது குறித்த முடிவு, அடுத்த மாதம் எடுக்கப்படும். எனினும், 32 அணிகளைக் கொண்ட உலகக் கிண்ணத் தொடரில் ஏற்படும் எந்த மாற்றமும் 2026ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைமுறைக்கு வராது என எதிர்பார்க்கப்படுகிறது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago