Shanmugan Murugavel / 2016 நவம்பர் 29 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய டெஸ்ட் தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்தே, இந்தத் தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய தரப்படுத்தலின்படி, இலங்கை அணி 7ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கு முன்னர் 6ஆவது இடத்தில் இலங்கையும் 7ஆவது இடத்தில் நியூசிலாந்தும் காணப்பட்டன.
7ஆவது நிலை அணியான நியூசிலாந்து, 2ஆவது நிலை அணியான பாகிஸ்தானை வென்றதன் காரணமாக அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது. இதனால் அவ்வணி, 6ஆவது இடத்துக்கு முன்னேற, இலங்கை அணி 7ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டது.
அதேபோல், 2ஆவது இடத்தில் காணப்பட்ட பாகிஸ்தான் அணி, இந்தத் தோல்விகளைத் தொடர்ந்து, 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
புதிய தரப்படுத்தல்: இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், சிம்பாப்வே.
19 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
2 hours ago