Shanmugan Murugavel / 2016 நவம்பர் 21 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் மிற்சல் சான்ட்னெர், அவ்வணியின் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.
பயிற்சியின் போது காயமடைந்தமை காரணமாக முதலாவது போட்டியில் பங்குபற்றியிருக்காத அவர், துரிதமாகக் குணமடைந்ததையடுத்து, குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலாவது போட்டிக்கான குழாமில் காணப்பட்ட ஜிம்மி நீஷத்துக்குப் பதிலாகவே, சான்ட்னெர் இணைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சிரேஷ்ட வீரர் றொஸ் டெய்லரின் இடது கண்ணில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக, அடுத்த போட்டியில் அவர் பங்குகொள்வாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அவர், வைத்தியரொருவரை நாடியுள்ளார்.
இரு அணிகளுக்குமிடையிலான 2ஆவது போட்டி, ஹமில்டனில் 25ஆம் திகதி ஆரம்பித்து இடம்பெறவுள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago