2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மூன்றாமிடத்தில் ராஜஸ்தான் அணி

A.P.Mathan   / 2014 மே 04 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் ரோயல்ஸ், டெல்லி டெயார் டெவில்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது, இதில் குயின்டன் டி கொக் 42 ஓட்டங்களையும், டுமினி 39 ஓட்டங்களையும், கெடார் ஜாதவ் 14 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள், 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜேம்ஸ் பொல்க்னர், பிரவின் தம்பே ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுக் கொண்டது. இதில் கருண் நாயர் 50 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள், 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களையும், சஞ்சு சம்சன் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் நாயகனாக கருண் நாயர் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் மூன்றமிடத்தைப் பெற்றுள்ளது. டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 4 புள்ளிகளுடன் ஏழாமிடத்தில் உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .