2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய அணித் தலைவர்

A.P.Mathan   / 2014 மே 09 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணித் தலைவராக தினேஷ் ராம்டின் அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் தினேஷ் ராம்டின் முதற் தடவையாக அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் அணியின் தலைவராக டரின் சமி கடமையாற்றி வந்தார். அவரிடம் இருந்த தலைமை பொறுப்பு தற்போது ராம்டினிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகளின் மூன்று வித அணிகளுக்கும் மூன்று தலைவர்கள் செயற்படுகின்றனர். டெஸ்ட் போட்டிகளுக்கு தினேஷ் ராம்டினும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு டுவைன் பிராவோவும், ட்வென்டி ட்வென்டி போட்டிகளுக்கு டரின் சமியும் கடமையாற்றுவர்.

மேற்கிந்திய தீவுகள் அணி இவாறான தெரிவை செய்தமை இதுவே முதற் தடவையாகும். இந்த மாற்றம் டெஸ்ட் அணியில் இருந்து டரின் சமி நீக்கப்பட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. நியூசிலாந்து அணியுடன் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கே இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .