A.P.Mathan / 2014 மே 15 , மு.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கான வாய்ப்புகளை சிம்பாவே அணியின் முன்னாள் வீரர் கிரான்ட் பிளவருக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயிற்றுவிப்பாளர் தெரிவுக் குழு, தலைமை பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனுசுக்கு துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கிரான்ட் பிளவர், இங்கிலாந்து அணியின் முன்னாள் களத்தடுப்பு மற்றும் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் ரிச்சர்ட் ஹல்சால் ஆகியோரை பரிந்துரை செய்துள்ளனர். அதற்கு வக்கார் யூனுஸ் சம்மதம் தெரிவித்துள்ள அதேவேளை, ஹல்சாலுக்கு வக்கார் யூனுசும் தனது ஆதரவினை அதிகமாக வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சிம்பாவே நாட்டவரான ஹல்சாலின் பயிற்றுவிப்பு திறைமைகளை வக்கர் யூனுஸ் நன்கு அறிந்து வைத்திருந்தைமையே அதற்கான காரணமாகும்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .