R.Maheshwary / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு –கரையாக்கன்தீவு, செக்கரியா குளம் புனர்நிர்மானம் செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக நேற்று(19) திறந்துவைக்கப்பட்டது.
கரையாக்கன்தீவு துர்க்கா இளைஞர் கழகத்தின் தலைமையில் ஏ.யூ லங்கா (AU Lanka) நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற "இளைஞர் தலைமையில் நீர் முகாமைத்துவம்" எனும் தொனிப்பொருளில் இளைஞர்கள் தலைமையிலான சுற்றுச்சூழல் நலன்சார்ந்த அனர்த்த அபாய குறைப்பு திட்டத்தின் கீழ், சைல் பண்ட் ஸ்ரீலங்கா, சைல் பண்ட் நியூஸ்லன்ட் மற்றும் சைல் பண்ட் கொறியா ஆகிய அமைப்புக்களின் நிதிப் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட முதலாவது குளமே உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், மாவட்ட அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்விற்கு, ஏ.யூ லங்கா நிறுவனத்தின் சிரேஸ்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.வீ.பிரகாஸ்உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த குளத்தில் அதிகளவிலான மழை நீர் சேமித்துவைக்கப்படுவதனால் இப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் (குடிநீர்) மற்றும் கால் நடைகள் அதிக பயன்பெற வாய்ப்பேற்படுவதுடன், இளைஞர்கள் ஊடாக நீர் முகாமைத்துவத்தை ஏற்படுத்தி வழிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கின்றது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago