Princiya Dixci / 2021 ஜூலை 07 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
சௌபாக்கியா வாரத்தையொட்டி, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சீட்டிழுப்பு நிதியத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள், பயனாளிகளிடம் நேற்று (06) ஒப்படைக்கப்பட்டன.
இதன்படி, மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் அமைக்கப்பட்ட இரண்டு வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கும் இந்நிகழ்வு, பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்றது.
சமுர்த்தி சீட்டிழுப்பு நிதியுதவியின் கீழ், ஒரு வீட்டுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலவிலும் பயனாளிகளின் பங்களிப்புடன் இந்த வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் செயலக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எம்.பாஸ்கரன், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.நியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
12 minute ago
32 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
32 minute ago
35 minute ago