Princiya Dixci / 2021 மே 05 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகயத்தில் கடமையாற்றும் 1 2பேர் உட்பட நேற்றைய தினம் (04) கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 30 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 60 உத்தியோகத்தர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதில் 12 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, மட்டக்களப்பில் 09 பேரும் காத்தான்குடியில் 04 பேரும் செங்கலடி பகுதியில் ஐந்து பேரும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பேணுவதுடன், பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
33 minute ago
7 hours ago
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
7 hours ago
16 Apr 2026
16 Apr 2026