Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜதுசன்,ஜவீந்திரா)
மட்டக்களப்பு, படுவான்கரைப் பிரதேசத்தின் போரதீவுப்பற்று பிரிவிலுள்ள விவேகானந்தபுரம் கிராமத்திற்குள் இன்று அதிகாலை வேளையில் புகுந்த காட்டு யானைகள் மூன்று வீடுகளுக்கு சேதம் விளைவித்துள்ளன.
இதன்போது, ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. இரு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன், அங்குள்ள மரவள்ளித் தோட்டம், பலாமரம் ஆகியவற்றையும்; சேதமாக்கியுள்ள காட்டு யானைகள், வீட்டிலிருந்த நெல்மூடைகளையும் உட்கொண்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் வரதாஜவுடன் நாளுக்குநாள் அதிகரித்துவரும் காட்டு யானைகளின் தொல்லைகள் குறித்தும் கலந்துரையாடினார். இக்கிராமத்திற்குள் காட்டு யானைகள் தினமும் உட்புகுந்து கிராம மக்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் சேதத்தை விளைவித்து வருகின்றன. படப்பிடிப்பு:-ஜவீந்திரா
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago