Super User / 2011 மே 08 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
கிழக்கு மாகாண காணி திணைக்களத்தினால் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை பிரிவிற்குலுள்ள மக்கள் எதிர்நோக்கும் காணி பிரச்சினை தொடர்பான நடமாடும் சேவை இன்று கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கடந்த கால யுத்தம் காரணமாக தங்களது ஆவனங்களை இழந்தவர்களும் தாங்கள் குடியிருந்ததற்கான முறையான ஆதாரங்கள் இல்லாதவர்களும் தங்களது காணி பிரச்சனையை தீர்த்து தருமாறு கிழக்கு மாகாண காணி அமைச்சரிடமும் கிழக்கு மாகாண காணி ஆணையாளரிடமும் நடமாடும் சேவையின் போது முறையிட்டனர்.
காணிக்குறிய ஆதாரங்களை முறையாக சமர்ப்பித்தவர்களுக்கு கட்டம் கட்டமாக அதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என்று மாகாண காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க மக்களிடம் உறுதியளித்தார்.
கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் தலைமையில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் கிழக்கு மாகாண காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர் சாலி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அனுர தர்மதாஸ, கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago