Super User / 2011 மே 10 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு பெரிய போரதீவிலுள்ள குளத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற எரிபொருள் நிரப்பும் நிலையத்தையும் வாகன சுத்திகரிப்பு நிலையத்தையும் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது விடயமாக அவர் ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள பெரிய போரதீவு கிராம சேவகர் பிரிவில் அடங்கும் கோயில் போரதீவு தென்கண்ட கண்ணகி அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 400 ஏக்கர் நெல் பயிர்ச்செய்கை நிலத்துக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு இக்குளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இக்குளம் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தால் பராமரிக்கப்படும் குளமாகும். தற்போது பெரிய போரதீவை சேர்ந்த ஒருவர் எரிபொருள் நிரப்பும் நிலையமும், வாகனங்களைச் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையமும் அமைப்பதற்கு அரச குளத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்புச் செய்து அதன் ஆரம்ப கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளார்.
இதனால் இக்குளத்தை நம்பி கால போக விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும். அத்துடன் இது போன்ற செயல்களால் இப்பகுதியில் வெள்வள்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
அத்துடன் இதில் எரிபொருள் நிரப்பு நிலையமும், வாகன சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்படுமாயின் அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிப்படையும்.
மேலும் சட்டவிரோதமான இச்செயலினால் இயற்கையான குளங்கள் அழிந்து போகும் நிலையே காணப்படும்.
எனவே ஜனாதிபதியின் நாம் பயிரிடுவோம் நாட்டைக் காப்போம் என்ற கொள்கைக்கு முரணாக அமையவுள்ள இச்செயற்பாட்டைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago