Super User / 2011 மே 15 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய்மார்களை வெளியேற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தவென மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சின் இரண்டாவது குழு மகப்பேற்று வைத்திய நிபுணர் திருக்குமரனிடம் நேற்று சனிக்கிழமை விசாரணைகளை மேற்கொண்டது.
சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் யோகநாதன் தலைமையில் விசேட குழு நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்தது.
கடந்த புதன்கிழமை பிரதிப்பணிப்பாளர் நாயகம் (புலனாய்வு) ரஹுமான் தலைமையில் முதலாவது குழு மட்டக்களப்புக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட 5 கர்ப்பிணித் தயாய்மரிடமும், வைத்தியசாலையின் தாதிகள், வைத்தியர்கள், குடும்ப நல தாதிகளிடம் தனித்தனியாக வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.
இதவேளை, சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பணியகப் பணிப்பாளர் டி.பி.பெரேரா, பிரதிப் பணிப்பாளர் சித்திர மாலி டி சில்வா, வைத்திய நிபுணர் கபில ஜெயரத்ன ஆகியோர் தலைமையில் மூன்றாவது விசாரணைக்குழு 3ஆம் கட்ட விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago