Super User / 2011 மே 17 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த 6 ஆம் திகதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இரு கர்பிணித் தாய்மாரை வைத்தியசாலையில் இருந்து மருத்துவர் ஒருவர் வெளியேற்றியமை தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திலிபால சிறிசேனவிடம் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதியமைச்சர் கோரியதாக அவரின் இணைப்பு செயலாளர் பொன் ரவீந்திரன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெறுவதாகவும், விசாரணையின் பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் சி.சரவணனின் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கான இடமாற்றம் ரத்துச்செய்யப்பட வேண்டும் எனவும், விடுதி 7ஐ பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, டாக்டர் சரவணனிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சரிடம் பிரதிமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, இச்சம்பவத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியனேத்திரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளரிடம் விளக்கம் கேட்டால் அதை மூடி மறைப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago