2026 மே 04, திங்கட்கிழமை

ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறப்பு

Super User   / 2012 மே 06 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


கட்டார் அகடமியின் நிதியுதவியுடன் ஏறாவூர் பிரதேசத்தில் நாற்பது இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்;கப்பட்டுள்ள ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் புதிய கட்டிடம் நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த திறந்து விழாவில் கட்டார் அகடமியின் பணிப்பாளர் கெமறன் ஜோன்சன், கட்டார் அகடமியின் இணைப்பாளர் மார்க் கி மைக்கல் மற்றும் செயற்பாட்டு இணைப்பாளர் சீவியோ றட்டல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இப்புதிய கட்டிடம் ஏறாவூர் கலை மகள் வித்தியாலய வீதியில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டார் அகடமியினால் ஏறாவூர் பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .