2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

த.ம.வி.பு. கட்சி செயலாளர் பிராசந்தனின் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில்; போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிராசந்தனின் தேர்தல் அலுவலகத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நுழைந்த சிலர் அந்த அலுவலகத்தில் இருந்தவரை தாக்கியதுடன், அங்கிருந்த சில தளபாடங்களை சேதப்படுத்தியுள்ளதாகவும்  முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில்; வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரையம்பதி வேட்பாளரின் உறவினர் ஒருவரும் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சிலருமே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த  சம்பவம் இடம்பெற்ற வேளை அந்த அலுவலகத்திற்குள் வேட்பாளர் பூ.பிரசாந்தன் இருந்திருக்கவில்லை எனவும் அவரது அலுவலக உதவியாளரே அலுவலகத்தில் இருந்ததாகவும் அங்குள்ள  கதிரைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .