2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

விபத்தினால் மின்சாரம் தடை

Super User   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


ஏறாவூர் நகர சபைக்கு முன்னாலுள்ள மின் கம்பமொன்றுடன் வேன்  மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியது. இதனால் ஏறாவூர் பிரதேசத்திற்கான மின் விநியோகம் தற்போது தடைப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் எவரும் உயிரிழக்கவில்லை. துண்டிக்கப்பட்டுள்ள மின் விநியோகத்தை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .