2026 மே 04, திங்கட்கிழமை

மட். போதனா வைத்தியசாலையில் அவசர மற்றும் விபத்துப் பிரிவு அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 மார்ச் 13 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், எஸ். பாக்கியநாதன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர மற்றும் விபத்துப் பிரிவு அமைப்பது தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அவுஸ்திரேலியாவின் பிரபல எலும்பு முறிவு வைத்திய நிபுணரும் பியப் அமைப்பின் தலைவருமான வைத்தியர் டேவிட் யங்கின் முயற்சியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர மற்றும் விபத்துப் பிரிவுகள் அமைப்பக்கப்படவுள்ளன.

சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள அவசர விபத்துச்சேவை சிகிச்சைப்பிரிவு தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.முருகானந்தன் தலைமையில் நேற்று செவவாய்க்கிழமை பகல் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தின்போது வைத்தியசாலையில் விபத்துகள், அவசர பிரிவு தனியாக அமைக்கப்படுவதான வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
 
இக்கூட்டத்திற்கு மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ்,    பியப் திட்;டத்தின் அமைப்பாளர் எலும்பு முறிவு வைத்திய நிபுனர் வைத்தியர் டேவிட் ஜங் (அவுஸ்திரேலியா), வைத்திய நிபுணர்கள், வர்த்தக சங்க பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியசாலை பணிப்பளார் முருகானந்தம்,
 
கிழக்கு மாகாணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வைத்தியசாலையாக இருக்கும் இவ்வைத்தியசாலையில் இருந்து நோயாளிகளை கொழும்புக்கு அனுப்பவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இவ்வைத்தியசாலையில் மேற்படி கட்டிடங்கள்  அமைக்கப்படுவதன் காரணமாக அந்த நிலை மாற்றப்பட்டு நேரம் குறைக்கப்படுவதால் நோயாளிகளின் இறப்பையும் குறைக்கலாம்.
 
கட்டிடட நிர்மாண பணிக்கான நிதி முழுமையாக சேகரிக்கப்பட்டதன் பின்னரே கட்டிட நிர்மாண பணிகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இதனால், இக்கட்டிட வேலைப்பாடுகள் 2014ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் ஆரம்பித்து 2015ஆம் ஆண்டு ஆவணி மாதம்
நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இதற்காக வழங்கப்படும் நிதிகள் தேசிய சுகாதார அபிவிருத்தி நிதியத்தினூடாகவே செலவுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்திய நிபுணர் டேவிட் ஜங் உரையாற்றுகையில்,

2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் பின்பு நான் இலங்கையில் பாதிப்புற்ற பல இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டேன். இதன்போது நான் மட்டக்கள்பபு போதனா வைத்திய சாலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளேன். அதன் பின்புதான் இவ்வாறான ஒரு திட்டத்தினை இலங்கையில் ஆரம்பிக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன்.

2005.2.10ஆம் திகதி இத்திட்டத்திற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான நிதியினை அவுஸ்திரேலியாவின் விக்டோறியா மானில ஆளுனரிடம் பெற்றுக் கொண்டோம். இதன் முதற்கட்டமாக கரப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அவசர மற்றும் வியத்துப் பிரிவு கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டது.

இதற்காக இலங்கை கிறிக்கட் அணி வீரர்களும் உதவிகளினை வழங்கினர். இதற்காக சுகாதார அமைச்சர் மைத்திறிபால சிறிசேனவுடன் 2012ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஒப்;பந்தம் ஒன்றை மேற்கொண்டோம்.

பின்னர் அவ்வாறான ஒரு கட்டிடத்தொகுதியினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைப்பதற்கு தீர்மானித்தோம். இதற்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது. இதில் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது எம்வசம் சேர்ந்து விட்டது. மிகுதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை சேகரிப்பதற்காகவே நாம் இவ்வாறான ஒரு ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

இக்கூட்டத்தின்போது, வைத்தியர் டேவிட் ஜங் இனால் தோல் அறுவை சிகிச்சை உபகரணம் ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .