Sudharshini / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
மாத்தளை, நவரத்னகொடை பாடசாலையின் அதிபரை, பாடசாலையிலிருந்து நீக்கிவிட்டு, புதிய அதிபரை நியமிக்குமாறு கோரி, பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து மாவட்ட கல்விக் காரியாலயத்துக்கு முன்பாக நேற்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பாடசாலையின் கல்வி நடவடிக்கை மற்றும்; ஒழுக்காற்று நடவடிக்கைகள் மோசமடைந்து வருகின்றமைக்கு தற்போதைய அதிபரே காரணம் என கல்விக் காரியாலயத்துக்கு அறிவித்த போதும், அது குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிடின், பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொண்டு போராட்டத்த்தில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago