2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அரசியலுக்காக சமயங்களை பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அரசியல் இலாபங்களுக்காக சமயங்களை பயன்படுத்துவது முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்று நீதி மற்றும் புத்தசாசன பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்திரபால தெரிவித்தார்.

நேற்று மாலை கண்டி பொல்கொல்லையில் அமைந்துள்ள கூட்டுறவு அபிவிருத்தி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதி அமைச்சர்,

“எந்த ஒரு சமயமும் தீயதை போதிப்பதில்லை. இருந்தாலும் சிலர் தமது அரசியல் மற்றும் அதிகார இலாபங்களுக்காக சமயங்களை தனக்கு தேவையான விதத்தில் பயன்படுத்திக் கொள்கின்றனர். அது முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

சமயங்கள் அனைத்தும் அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் கலமாகவே உள்ளது. எமது மூதாதைகளும் அவ்வாறே நடந்துள்ளனர். இலங்கைக்கு சுதந்திரத்தை பெற்றக் கொள்வதற்காக போராடியவர்கள் பௌத்தர்கள் மட்டுமல்ல. டீ.பீ.ஜாயா போன்ற முஸ்லிமகளும் சேர் பொன்னம்கலம் இராமநாதன் போன்ற தமிழர்களும் ஒன்று சேர்ந்தே போராடினார்கள். அவர்கள் எவரும் சமயங்களுக்காக போராடவில்லை. அவர்கள் தாய் நாட்டுக்காகவே போராடினார்கள். இந்நிலை எங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .