Kogilavani / 2016 ஜனவரி 17 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
ஆதிவாசிகள் தலைவர் ஊருவரிகே வன்னியலே அத்தோவுக்கு இம்மாதம் முதல் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயகத்தேரர் கலகம அத்ததஸ்சி தேரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மஹியங்கனை ரஜமகா விகாரையில் நடைபெற்ற நிகழ்வின் போதே இதற்கான ஆவணங்களை, ஊருவரிகேயிடம் தேரர் கையளித்தார்.
கதிர்காம தேவாலயத்தின் பெரஹெராவில் முக்கிய சடங்காகக் கருதப்படும் வள்ளியம்மையினது திருமணத்தை நினைவு கூறும் சம்பிரதாயத்துக்கான ஏற்பாடுகளை கவனித்தல், அதற்கான பாதுகாப்புப் பூஜைகளை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை ஆதிவாசிகளின் தலைவர் கடந்த 50 வருடங்கலாக கவனித்து வந்துள்ளார்.
81 வயதுடைய ஊருவரிகே வன்னியலே அத்தோவுக்கு 4,000 ஆயிரம் ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிகழ்வில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கா, ருகுனு கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பீ.குமாரகம உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .