Princiya Dixci / 2017 மே 03 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்
நுவரெலியாவிருந்து தலவாக்கலை பிரதேசத்துக்கு கோழி உரம் ஏற்றிச்சென்ற லொறி, ரதெல்ல குறுக்கு வீதியில் மண்மேட்டில் மோதி, இன்று காலை 7 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், விபத்து தொடர்பான விசாரணையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் சாரதிகளுக்கு தெளிவுபடுத்தும் எச்சரிக்கை விளம்பரப் பலகைகள், இப்பாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தும் இவ்வாறான விபத்துகள் தொடர்ந்தவண்ணம் இருப்பதாக, நானுஓயா பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .