Sudharshini / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாகியுள்ள தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டுமென கண்டி மாநகர வர்த்தக சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'சிரேஷ்ட அரசியல்வாதியான சம்பந்தன் ஐயா, இந்த நாட்டின் எதிர்க் கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். இவரது எதிர்கால வேலைத்திட்டங்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை.
இவர் தமிழர் என்றபடியால் தமிழர்களுக்கு மட்டுமானவர் என்று அர்த்தமல்;ல. அனைத்து இனத்தவருக்கும் பொதுவானவர். தற்போது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் இணைந்துள்ள நிலையில், மூன்றாவதாக அதிகூடிய வாக்குகளை பெற்ற கட்சியே எதிர்க்கட்சியாக வரமுடியும்.
இந்நிலையில் எதிர்க் கட்சியின் தலைவராக தெரிவாகியுள்ள சம்பந்தன், தமது பணியை சரவர நிறைவேற்றுவார் என நம்புகின்றோம்.
இந்நிலையில் நாட்டின் இன பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்;கொள்ளும் சம்பந்தன், மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
சுமார் 200 வருடகால வரலாற்றைக்கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் நாடாளுமன்றத்தின் மூலம் கிடைக்கப்பெற வேண்டும்.
மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போது மலையகத்திலிருந்தும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், அவர்களுக்கு உதவியாகவும் சிறந்த ஆலோசகராகவும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பவராகவும் இருக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
13 minute ago
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
1 hours ago