Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கன்னொருவ வீதி, வாரதென்ன பிரதேசத்திலுள்ள வீட்டுத் தோட்டமொன்றில் கஞ்சா செடிகளை வளர்த்துவந்த இருவரை, இன்று (2) கைதுசெய்துள்ள கட்டுகஸ்தோட்டை பொலிஸார், அவர்களிடமிருந்து ஐந்தரை இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்தரை கிலோகிராம் கஞ்சா செடிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொண்டச் சுற்றிவளைப்பின்போதே, மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கண்டி வைத்தியசாலைக்கு அண்மித்த பிரதேசத்தில், 62.35 கிராம் ஹெரோய்ன் மற்றும் 50,820 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பெண்ணொருவரை (வயது 32), போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
இதன்போது சுமார் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பெண், ஏற்கெனவே பெண் ஒருவரைக் கொலை செய்த விவகாரம் தொடர்பாக 9 வருடங்கள் சிறைத் தண்டளை பெற்று விடுதலையானவர் எள்றும், சிறையிலிருந்து 8 மாதங்களுக்கு முன் விடுதலையானவர் எனவும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Apr 2026