Kogilavani / 2020 நவம்பர் 03 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தில் இதுவரை 41 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்களாக 1,122 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, கண்டி மாவட்டச் செயலாளர் சந்தன தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுத் தொடர்பிலான கூட்டம், மாவட்டச் செயலகத்தில், இன்று (3) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், கண்டி மாவட்டத்தின் கங்கவட்டகோரளய பகுதியில் ஒருவரும் குண்டசாலை பிரதேச செயலாளர் பிரிவில் 5 பேரும் பாதத்தும்பறையில் ஒருவரும் யட்டிநுவரவில் இருவரும் உடபலாத்தயில் 9 பேரும், தெவவௌ பகுதியில் 6 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர் என்றுத் தெரிவித்தார்.
மேலும் தெல்தொட்டையில் 4 பேரும் மெதத்தும்பறையில் 4 பேரும் உடதும்பறை, மினிப்பே, அக்குறணை, ஹரிஸ்பத்துவ ஆகிய பிரதேசங்களில் தலா ஒருவரும் தும்பதெனவில் இருவரும் கங்கஇஹலகோரள பகுதியில் ஐவரும் இனங்காணப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இனங்காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை மய்யங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர் என்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருள்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago