Editorial / 2018 ஜனவரி 27 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு முழுமையான ஆதரவு இருப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் இளைஞர் அணி உதவிச் செயலாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் மக்களை நேரடியாக சந்திக்கும் போது, இதனை அறிந்துகொள்ள முடிந்ததாகவும் கடந்த காலத்தில் மக்கள் விட்ட பிழையை சரிசெய்துகொண்டு, சரியான தேர்வான சேவல் சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் தொடர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், இளைஞர் இம்முறை இ.தொ.காங்கிரஸை வெற்றிபெறச் செய்யும் ஆர்வத்துடன் பெருமளவில் களத்தில் இறங்கி பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இ.தொ.கா வெற்றிபெற்று, மலையக இளைஞர்களுக்கு சிறந்தவொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் என்பதை உறுதியாகக் கூறுவதாகவும் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளர்
அத்துடன், தோட்டத் தொழிலாளர்களும் கடந்த பொதுத் தேர்தலில் தவறிழைத்திருப்பதை உணர்ந்திருப்பதாகவும், அந்த தவறை இம்முறை திருத்திக் கொண்டு இ.தொ.காவை வெற்றிபெறச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேரடியாகவே தொழிலாளர்களைச் சந்தித்தபோது அவர்களின் மன உணர்வுகள் இதனைத் தெளிவாக உணர்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
22 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago