எஸ்.சதிஸ் / 2020 மே 18 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்துள்ள சந்தர்ப்பத்தில் கூட, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்க முடியவில்லை என்றால், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் அதிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலயா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தலைவருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
ஹட்டனில், நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சர்வதேசத்தில் தேயிலையின் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு, கம்பனிகள் முன்வருவதில்லை என்ற காரணமே தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் ஆனால், தற்போது, உலக சந்தையில் தேயிலையின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது என்ற தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த சூழ்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏன் 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்க முடியாது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், தொடர்ச்சியாக மக்களை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தி வருவதாகவும் மக்களிடமிருந்து சந்தாவை அறவிடும் தொழிற்சங்கங்கள், இந்த 1,000 ரூபாய் பற்றி கம்பனிகளுக்கு அழுத்தங்கள பிரயோகித்துள்ளனரா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எனவே, இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்திலாவது, 1,000 ரூபாயை தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் இல்லையேல், அவர்கள் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்றும் தெரிவித்த அவர்,அவ்வாறு வெளியேறினால், மற்றைய தொழிற்சங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, 1,000 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுத்தருவதாகவும் அவர் கூறினார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago