Editorial / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய, சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், பொகவந்தலாவ - கெர்க்கஸ்வோலட் மத்தியப் பிரிவு, மேற்பிரிவு, கீழ்ப் பிரிவு, எல்பட கீழ்ப் பிரிவு, மேற்பிரிவு ஆகிய தோட்டபகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு, கோழிக் குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வு, நோர்வூட் பிரதேசபையின் உறுப்பினர் திருமதி மாடசாமி சரோஜா தலைமையில், இன்று (03) நடைபெற்றது.
இதன்போது, 46 குடும்பங்களுக்கு 228,500 ரூபாய் செலவில், கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .