Gavitha / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
14 வயது காதலியை வன்புணர்வுக்குட்படுத்திய 15 வயது காதலனை மொனராகலை பொலிஸார் திங்கட்கிழமை (05) கைது செய்துள்ளனர்.
மொனராகலையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 9இல் கல்வி கற்று வரும் மாணவியும் அதே பகுதியில் வேறொரு பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவனும் காதலர்கள் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மாணவியின் தாய் தற்போது உயிருடன் இல்லை என்றும் அவருடைய தந்தை இரண்டாம் திருமணம் முடித்துக்கொண்டதையடுத்து, அவர் தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தமையும் தெரியவந்துள்ளது. இதன்போதே காதலன், இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியின் வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் மாணவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்று மொனராகலைப் பொலிசார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .