Sudharshini / 2016 ஜனவரி 06 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கொத்மலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதியை, அடித்துக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்களை நேற்று (06) கைது செய்துள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களென ஏற்கனவே இருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி-நுவரெலியா பிரதான வீதியின் வெதமுல்ல தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 28ஆம் திகதி வீதியை கடக்கமுயன்ற பெண்ணொருவர் மீது, லொறியொன்று மோதியதில் அப்பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்தையடுத்து லொறியை சுற்றிவளைத்த பிரதேசவாசிகள், லொறி மீது தாக்குதல் நடத்தியதுடன் சாரதியை லொறிக்குள்ளிலிருந்து வெளியே இழுத்தெடுக்க முயற்சித்தனர். சம்பவத்தை கேள்வியுற்று ஸ்தலத்துக்கு விரைந்த கொத்மலை பொலிஸார், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
டிசெம்பர் 29ஆம் திகதியன்று சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, அவரை இன்று (07) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago